
போரினால் பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோருடன் பயனிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்த சுயமதிப்பீடு செய்யும் “பதின்மம் கழிந்தும்” என்ற தொணிப்பொருளிலான மாநாடு இன்று யாழில் நடைபெறுகிறது.
யாழ் றொட்றரிக் கழகம் DATA அமைப்புடன் இணைந்து யாழ் ரில்கோ விடுதியில் நடைபெற்றுவரும் இம் மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்கள் தமது பூரண ஆதரவை அளித்துள்ளன.
இந்றைய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாண சபை முதல்வரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.
இம் மாநாட்டில் மாற்றுத்திறணாளிகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என நான்கு பிரிவுகளாக ஆராய்ந்து அவர்களின் வாழ்வு நிலையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கோடு இதுவரை காலமும் சந்தித்தவையும், சாதித்தவையும் தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு, இனி வரும் காலங்களில் அவர்களின் வாழ்வுப் பயணத்திற்கான திட்டங்கள் தொடர்பிலும் இம் மானாட்டில் ஆராயப்படவுள்ளது.
