Home செய்திகள் இலங்கை விமானப்படையின் ஜீப் மோதியதில் இளைஞ்ஞன் பலி!

இலங்கை விமானப்படையின் ஜீப் மோதியதில் இளைஞ்ஞன் பலி!

186
0

கிளிநொச்சியில் இலங்கை விமானப்படையினரின் ஜீப் வண்டி ஒன்று உந்துருளியுடன் மோதியதில் உந்துருளியில் பயனித்த இளைஞ்ஞன் உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டக்கச்சியை அண்மித்த இராமநாதபுரம் எனும் இடத்திலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (06/13) காலை இடம்பெற்ற இவ் விபத்தில் அதேபகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞ்ஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டக்கச்சி இராமநாதபுரம் வழியாக இரணைமடு பின்புறமாக அடர்ந்த காட்டின் நடுப்பகுதியால் மாங்குளம் – ஒட்டுசுட்டான் வீதியை ஊடறுத்து செல்லும் பழைய கண்டி வீதியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளமும் தற்போது இலங்கை விமானப்படை வசம் உள்ளமை இங்கு லுறிப்பிடத்தக்கது.