Home செய்திகள் யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடககற்கை துறை!

யாழ் பல்கலைக்கழகத்தில் ஊடககற்கை துறை!

121
0

நீண்டதொரு முயற்சியின் பயனாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடககற்கை துறை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துறையினுடைய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இன்று காலை 9மணி அளவில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் முன்னாள் துணைவேந்தரும் ஊடக கற்கை மையமொன்றை உருவாக்க பாடுபட்டவர்களுள் ஒருவருமான கலாநிதி.பாலசுந்தரம்பிள்ளையும் பிரச்சன்னமாகியிருந்தார்.

ஊடககற்கைகள் துறைத்தலைவர் கலாநிதி ரகுராமின் கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடக கற்கைத்துறை ஈழத்து ஊடகத்துறையின் மற்றுமொரு பரிணாமத்தை தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.