Home செய்திகள் தமிழ் தலைமைகள் அனைத்தும் எங்களுக்கு இதுதான் வேண்டுமென தெளிவாக சொல்லக்கூடிய ஒற்றுமையின்றி இருக்கின்றோம்.

தமிழ் தலைமைகள் அனைத்தும் எங்களுக்கு இதுதான் வேண்டுமென தெளிவாக சொல்லக்கூடிய ஒற்றுமையின்றி இருக்கின்றோம்.

174
0

தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழ் தலைமைகள் அனைத்தும் எங்களுக்கு இதுதான் வேண்டுமென தெளிவாக சொல்லக்கூடிய ஒற்றுமையின்றி இருக்கிறோம். இது தீர்விற்கு தடையாக உள்ள பாரிய விடையம் என தமிழ்த் தேஸியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அச் செவ்வியில் கூறுகையில்…

அரசியல் தீர்வு என்பது இன்றைய சூழ்நிலையில் நடக்க முடியாத ஒன்றென அனைவரும் அறிந்ததே. தென்னிலங்கையில் இருக்கக் கூடிய தற்போதைய சூழ்நிலையில் சிங்கள தலைமைகள் ஒன்றுபட்டு தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க மாட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில் சிங்கள தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். பேச்சளவில் அதிகாரப் பகிர்வு நியாயமான தீர்வு என பேசினாலும் செயற்பாடு என்று வருகின்ற வேளையில் பின்னடிப்பார்கள் குழப்புவார்கள். இது கடந்த 70 வருடமாக பார்த்து வரும் விடயம்.

இந்த விடயத்தில் சிங்கள தலைமைகள் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழ் தலைமைகள் அனைத்தும் எங்களுக்கு இதுதான் வேண்டுமென தெளிவாக சொல்லக்கூடிய ஒற்றுமையின்றி இருக்கின்றோம். ஏறக்குறைய ஒரே விடயத்தை கட்சிகள் அனைத்தும் சொன்னாலும் வௌ;வேறு சொற்பதங்களை பாவித்து ஏதோ தான் சொல்வது தான் சரியான தீர்வாக தமிழ் மக்களுக்கு இருக்கும்.

தாம் தான் மிகச்சிறந்த தமிழ்த் தேசியவாதியென்றும் மற்றவர்கள் தமிழ்த் துரோகி என்றும் கூறி 70 வருட காலத்தை கடத்திவிட்டோம். இந்த நிலைமை மாறி நாம் அனைவரும் ஒன்றாக இன்று ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.

எவர் ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அவர்கள் கொடுக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களுடன் எழுத்து மூல ஒப்பந்தமோ மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் செய்யப்படும் ஒப்பந்தமோ நிறைவேற்றப்படுமென்று நான் நம்பவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்ணூடாக பார்க்கின்றோம்.

அன்று பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதையும் டட்லி – செல்வா ஒப்பந்தம் மூலம் உள்ளுராட்சி சபைகள் அமைச்சை மு. திருச்செல்வம் ஏற்று அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்குமென ஏற்றுக்கொண்ட போதும் சிங்கள தலைமைகள் தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை.

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் யாரோ ஒரு வேட்பாளரை நம்பி அவருடன் எழுத்து மூல உறுதிமொழிகளை வாங்கினாலும் கூட அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நான் எதிர்பார்க்கவில்லை.

ஆகவே, வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் தமிழத் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் வேட்பாளர்களில் ஓரளவு நியாயமாக நடந்து கொள்ளக்கூடிய சொன்னதை நிறைவேற்றக்கூடியவர் என கருதப்படக்கூடியவரை ஆராய்ந்து முடிவெடுக்கும்.