Home செய்திகள் சிங்களவர்க்கு தாரைவார்க்கப்பட்ட தமிழர் தாயக குளம்!

சிங்களவர்க்கு தாரைவார்க்கப்பட்ட தமிழர் தாயக குளம்!

239
0

வெலிஓயாவென நாமம் சூட்டப்பட்டுள்ள சிங்கள குடியேற்ற  திட்டத்தில் குடியமர்ததப்பட்டுள்ள சிங்களவர்களிற்கு கொக்குத்தொடுவாயிலுள்ள ஆமையன் குளத்தை பெயர் மாற்றி தாரைவார்த்துக் கொடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன.

இந் நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ். சிவமோகன் மற்றும் காதர் மஸ்தான்,  உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோற் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களை வைத்து, தமிழர்களின் கண்முன்னேயே தமிழர் தாயகத்தை கூறுபோட்டு சிங்களப் பெயர் சூட்டி சிங்கள மக்களூக்கு தாரைவார்க்கிறது சிங்கள பெளத்த பேரினவாத அரசு. என்றுதான் உணர்வுள்ள தமிழராக உரிமைக்காக குரல்கொடுக்க போகிறார்களோ இந்த தமிழ் அரசியல் தலைமைகள்….?