Home முக்கிய செய்திகள் பதட்ட நிலையை இல்லாதொழிக்க உதவுங்கள் – மஹிந்தவிடம் மன்றாடிய முஸ்லீம் தலைமைகள்:

பதட்ட நிலையை இல்லாதொழிக்க உதவுங்கள் – மஹிந்தவிடம் மன்றாடிய முஸ்லீம் தலைமைகள்:

157
0

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று சந்தித்தனர்.

இதன் போது தமது பதவி விலகல் தொடர்பில் காரணங்களையும் எடுத்துக் கூறியதோடு, முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். எனவே தாங்கள் முன்வந்து நாட்டு மக்களுக்கு இது பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலமையை இல்லாதொழிக்க பங்களிப்பு வழங்க வேண்டும் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மஹிந்த தன் வலையில் அடுத்த தேற்தலுக்கான காய்களாக முஸ்லீம் தலைமைகளை பாவிக்க கூடும். இதற்கு முஸ்லீம் தலைமைகளும் ஒத்துப் போகும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.

இதனால் அடுத்த தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லீம்களின் வாக்குகளை இழக்கவும், பாரிய பின்னடைவை சந்திக்கவும் வாய்ப்புக்கள் உள்ளமையையே இன்றைய முஸ்லீம் தலைமைகளின் கூட்டான மன்றாட்டம் வெளிப்படுத்த்இ நிற்கிறது.