Home செய்திகள் நாட்டை விட்டு வெளியேற தயாராகும் 7000 முஸ்லீம் குடும்பங்கள்: ஹிஸ்புல்லா

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் 7000 முஸ்லீம் குடும்பங்கள்: ஹிஸ்புல்லா

171
0

மார் 7 ஆயிரம் முஸ்லீம் குடும்பங்கள் இலங்கையை விட்டும் வெளியேறுவதற்காக வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, நேற்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.