Home முக்கிய செய்திகள் தேர்தலை முன்னிட்ட தந்திரோபாயம் – 600 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிய மைத்திரி!

தேர்தலை முன்னிட்ட தந்திரோபாயம் – 600 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிய மைத்திரி!

183
0

நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று 600 பேருக்கு காணி அனுமதி பத்திரம், 1100 பேருக்கு காணி உறுதி பத்திரம், 13,643 குடும்பங்களுக்கு சமுர்த்தி உரித்து அனுமதி பத்திரம் என்பன வழங்கப்பட்டன.

முல்லைத்தீவில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைச்சர்களான கயந்த கருணாதிலக, தயா கமகே, காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், காதர் மஸ்தான், சிவமோகன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.