Home செய்திகள் நீதியரசர் C.V. விக்னேஸ்வரனை நேரில் சென்று சந்தித்த மாற்றுத்திறணாளிகள்:

நீதியரசர் C.V. விக்னேஸ்வரனை நேரில் சென்று சந்தித்த மாற்றுத்திறணாளிகள்:

166
0

புதிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான மாற்றுதிறனாளிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், நீதியரசருமான க.வி. விக்னேஸ்வரன் அவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

க.வி. விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று (07) இச் சந்திப்பு இடம்பெற்றது.

தமக்க ஏற்ப்பட்டுள்ள  பிரச்சினைகள் குறித்தும் தமது புதிய வாழ்வு இல்லத்தின் செயற்பாடுகள் குறித்தும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், புதிய வாழ்வு இல்லத்தில் முன்னாள் பெண்கள் போராளிகளின் பராமரிப்பு பகுதியை அங்குரார்ப்பணம் செய்துவைக்க வருமாறு க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் நேரில் அழைப்பை விடுத்துமிருந்தனர்.

அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதாகவும் பெண்கள் போராளிகளின் பராமரிப்பு, முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் மறுவாழ்வு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவிகளை மேற்கொள்வதாகவும் மாற்றுதிறனாளிகளிடம் தெரிவித்துள்ளார்.