
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்படட் நாடுகளில், தமிழர் கல்வி மேம்பாடடுப் பேரவையின் இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வு கடந்த 01.06.2019 சனிக்கிழமை நடைபெற்றது.
அந்த வகையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 120 க்கு மேற்படட் தமிழாலங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களில் தேர்வு நிலைக்குத் தகைமையுள்ள ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான 4800 மாணவர்களும் அத் தேர்வில் இணைந்துள்ளனர்.
தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட 65 விசேடமான தேர்வு நிலையங்களில் முதற்கட்டமான 70 புள்ளிகளுக்கான அறிமுறைத் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
