Home செய்திகள் யாழில் விபத்து – 4 பாடசாலை மாணவர்கள் உட்பட ஐவர் காயம்!

யாழில் விபத்து – 4 பாடசாலை மாணவர்கள் உட்பட ஐவர் காயம்!

141
0

யாழ் கொட்டடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 5  பேர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் உஸ்மானியா பாடசாலைக்கு அருகில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீதும் மோட்டார் சைக்களில் சென்ற இரண்டு மாணவர்கள் மீதும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.