Home முக்கிய செய்திகள் பகட்டாக அறிவித்துவிட்டு பதவி துறக்காமல் இருக்கும் முஸ்லீம் அமைச்சர்கள்!

பகட்டாக அறிவித்துவிட்டு பதவி துறக்காமல் இருக்கும் முஸ்லீம் அமைச்சர்கள்!

177
0

தமது பதவிகளை துறப்பதாக அறிவித்த 9 முஸ்லிம் அமைச்ச்ரக்ளும் இன்னமும் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வட்டாரங்களில் விசாரித்தபோது, பதவி விலகுவதாக கூறிய 9 முஸ்லீம் அமைச்சர்களும் தமது வாகனங்களை இன்னமும் மீள கையளிக்கவில்லை என்றும், அவர்களது பிரத்தியேக அலுவலர்களும் ராஜினாமா செய்யவில்லை என்பதோடு அவர்களுக்கான பாதுகாப்பும் எந்த மாற்றமும் செய்யப்பபடாமல் அப்படியே இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

ஆனால், இது தொடர்பில் கருத்து தெரிவித்த பைசல் காசிம், தங்கள் கடந்த திங்கட்கிழமை ராஜினாமா கடிதங்களை கையளித்துவிட்ட்டதாக டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால், யாரிடம் கடிதங்களை கையளித்தீர்கள் என்று தமது ஊடகவியலாளர் கேட்பதற்கு எத்தனித்தபோது தொலைபேசியை துண்டித்துவிட்டதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இந்த அமைச்சர்களின் அமைச்சு செயலாளர்களை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்றும் ஆனாலும், ரவூப் ஹக்கீம் வகித்த நகர திட்டமிடல், நீர் வழளங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சு , அமைச்சர் ஹக்கீம் இன்னமும் தனது ராஜினாமா குறித்து தமக்கு அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.