Home தாயக செய்திகள் 45ம் ஆண்டு நினைவை முன்னிட்டு தியாகி பொன்.சிவகுமாரனுக்கு மக்கள் அஞ்சலி:

45ம் ஆண்டு நினைவை முன்னிட்டு தியாகி பொன்.சிவகுமாரனுக்கு மக்கள் அஞ்சலி:

170
0

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு உரும்பிராய் பொதுச்சந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் தியாகி சிவகுமாரனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகான சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் சிவகுமாரன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரண்டனர். இதுவே மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று கொள்கை மாற்றம் இன்றி பல பரிமான வளர்ச்சி பெற்று உலகமே பார்த்து வியக்குமளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டமாக வளர்ச்சி பெற்றது. போராளிக்குரிய உறுதியோடும், கட்டுப்பாடோடும் முதன் முதலாக சயனைட் அருந்தி தன் உயிரைத் துறந்தவர் பொன்.சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.