Home செய்திகள் காவல்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!

காவல்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!

161
0

இரு தினங்களுக்கு முன் காணாமல் போயிருந்த காவல்துறை உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (05) காலை மொனராகலை காவல்துறையினர் மீட்டதுடன் சடலத்தருகே இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

மொனராகலை காவல் நிலையத்தில் கடமையாற்றிய 32 வயதான  அசங்க பிரேமஜயந்த அமரவீர என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காவல் அதிகாரி இரு பிள்ளைகளின்  தந்தையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  03 ஆம் திகதி குறித்த காவல் அதிகாரி செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மொனராகலை வெதிகும்பர என்ற இடத்தில் பன்னிரண்டடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளான நிலையிலும் இரு தினங்களுக்குப் பின்னரே காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது சடலத்தை மீட்ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மொனராகலை நீதவான் நீதிபதியின் உத்தரவின் பேரில் சடலம் மொனராகலை அரச வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலைப் காவல்துறையினர் குறித்த  மரணம் தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.