Home செய்திகள் இக்கட்டான சூழ்நிலையில் “ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்” – கவலையளிப்பதாக ஹக்கீம் தெரிவிப்பு!

இக்கட்டான சூழ்நிலையில் “ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்” – கவலையளிப்பதாக ஹக்கீம் தெரிவிப்பு!

131
0

இக்கட்டான சூழ் நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேர்ந்திருப்பது கவலைக்குரியது என “ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள்” (ரமளாண் பண்டிகை) வாழ்த்துச் செய்தியில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது;

தீவிரவாத சிந்தனைப் போக்கின் விளைவாக முஸ்லீம்களில் சிலர் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து அண்மைக்கால வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாதவாறு இந்த நாட்டின் முஸ்லீம் சமூகம் பாரிய சோதனைகளுக்குள்ளும், வேதனைகளுக்குள்ளும் உள்ளாகியிருக்கும் வேளையில் இவ் ஆண்டு “ஈதுல் பித்ர்” ஈகைத் திருநாளை நாம் சந்திக்கின்றோம்.

ஒரு மாதகாலம் பசித்திருந்து, விழித்திருந்து இறைவணக்கத்தில் அயராது ஈடுபட்டு நோன்பு நோற்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேற்ந்திருப்பது கவலைக்குரியது.

மூன்று தசாப்தகால கோர யுத்தம் ஓய்ந்து நாட்டில் சமாதான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட்உ வந்த சூழ்நிலையில் நீண்ட இடைவெளியின் பின்னர் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வந்த நல்லிணக்கச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் சந்தேகமும், அச்சமும் ஆழமாக குடிகொள்ள ஆரம்பித்துள்ளது.

அதுமட்டுமன்றி, இவ்வளவு காலமாக சமய, சமூக தனித்துவத்தை பேணி சிறுபான்மை முஸ்லீம் சமூகம் அனுபவித்து வந்த உரிமைகளைக் கூட பறிகொடுக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

யுத்தம் நடைபெற்றுவரும் முஸ்லீம் நாடுகள் சிலவற்றிலும், ஏனைய சில நாடுகளிலும் இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாளும் முஸ்லீம்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவும், சகல இன மக்களும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவும் அருள்புரியும்ஆறு எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவோமாக. என தெரிவிக்கப்பட்டுள்ளது.