Home முக்கிய செய்திகள் அரசுடமையாகும் புலிகளின் மரமுந்திரிகை பண்ணை!

அரசுடமையாகும் புலிகளின் மரமுந்திரிகை பண்ணை!

231
0

மன்னார் – மாந்தை – வெள்ளாங்குளம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் 25 ஆண்டுகள் முன்னர் உருவாக்கப்பட்ட மரமுந்திரிகை வளர்ப்புத் திட்டக் காணிகள் அரசுடமையாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இவ் விடையம் தொடர்பில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் மன்னார் – மாந்தை – வெள்ளாங்குளம் கிராமத்தில் கணேசபுரம், சேவலங்கா மற்றும் இந்திய வீட்டுத்திட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை உள்ளடக்கி 1994ஆம் ஆண்டு மரமுந்திரிகை செய்கைக்கான செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த காணிகள் இராணுவம் வசமிருந்ததையும் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

வடக்கு கிழக்கு ஜனாதிபதி செயலணிக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த காணியில் 275 ஏக்கர் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு போரால் கணவனை இழந்த பெண்கள் உள்ளிட்ட முன்னாள் போராளிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.