
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கண்டியில் உண்ணாவிரதம் இருந்த அத்துரலிய ரத்தன தேரரை பார்ப்பதற்கு நேற்று விஜயம் செய்ததன் மூலம் வெறுப்பையும் மதவாதத்தையும் பரவ செய்திருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனை வத்திக்கான் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் தனது டுவிட்டர் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.