
கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (04) மாலை 03.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
நேற்று மாலை முஸ்லீம் அமைச்சர்கள் அனைவரும் திடீரெனவும், அதிரடியாகவும் அனைத்து அமைச்சுப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்ததன் பின் நாட்டின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமை காரணமாக இவ் ஒன்றுகூடல் அவசரமாக இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.