Home முக்கிய செய்திகள் இனவாதத்தை வெளிப்படுத்தியது இலங்கை அரசு! உணருமா தமிழ்த் தலைமைகள்?

இனவாதத்தை வெளிப்படுத்தியது இலங்கை அரசு! உணருமா தமிழ்த் தலைமைகள்?

127
0

மூன்று முஸ்லிம் பிரமுகர்களின் பதவி நீக்கம் கோரி புத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் மூன்று நாட்களில் வெற்றியில் முடிவடைந்துள்ளது. இதற்கு சிங்கள இநத்தவரான பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகையும் ஆதரவு கொடுத்திருந்தார்.

ஆனால் காணாமல் போனவர்களின் உறவுகள் மேற்கொண்டு வரும் பல வருட போராட்டத்திற்கு எந்த முடிவும் இன்னும் கிடைக்கவில்லை.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சிறைகளில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் வரை நடை பவனி சென்றனர். அதற்கும் அரசு மதிப்பு தரவில்லை.

கேப்பாப்புலவு மக்கள் தம் நிலத்தை கோரி இரண்டு வருடமாக வீதியில் இருந்து போராடுகின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு நிலம் கிடைக்கவில்லை.

ஒரு பிக்குவின் உண்ணாவிரதத்திற்கு 3 நாட்களில் முடிவு வழங்கிய அரசு தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு எந்த முடிவையும் வழங்குவதில்லை எந்பதோடு அதனை கண்டுகொள்வதில்லை என்றே சொல்லலாம். இதனை சர்வதேசம் கண்டுகொள்ளூமா…?

இத்தனைக்கும் இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி இக் கணம்வரை தமிழ் எம்பி களின் ஆதரவினால்தான் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆகவே தமிழ் தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்…?

ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சித்தமிழ்த் தலைமைகளும், தமது பதவிகளை துறக்க தயாரா…?

ஆட்சிக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த துணிவு உண்ட…?

உண்மையில் தமிழர்கள் நலனுக்காக எனில் தமிழர்கள் பிரச்சனை தீர்க்காத அரசுடன் ஒடர்ந்து செல்வது ஏன…?????????