Home செய்திகள் நெடுங்கேணியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி!

நெடுங்கேணியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி!

201
0

வவுனியா, நெடுங்கேணியில் நேற்று மாலை 6.30 மணியளவில் இராணுவத்தினரின், பிக்கப் வாகனம் மோதியதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் முதியவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நெடுங்கேணி சேனைப்புலவைச் சேர்ந்த 6 வயதுடைய எஸ்.பேரம்பலம் என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.