Home செய்திகள் யாழ்ப்பாணத்தில், யூன் 14 அன்று பாதிக்கப்பட்டோருக்கான மாநாடு!

யாழ்ப்பாணத்தில், யூன் 14 அன்று பாதிக்கப்பட்டோருக்கான மாநாடு!

169
0

போரினால் பாதிக்கப்பட்டோரும், பாதிக்கப்பட்டோருடன் பயனிப்போரும் இணைந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், பயனும் குறித்த சுயமதிப்பீடு செய்யும் நோக்குடன் “பதின்மம் கழிந்தும்” என்ற தொணிப்பொருளில் மாநாடு ஒன்றை யாழ் றொட்றரிக் கழகம் DATA அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 14-06-2019 அன்று நடைபெற ஏற்பாடாகியுள்ள இம் மாநாட்டில் மாற்றுத்திறணாளிகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என நான்கு பிரிவுகளாக ஆராய்ந்து அவர்களின் வாழ்வு நிலையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோகோடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் சந்தித்தவ்வஇயும், சாதித்தவையும் தொடர்பில் ஆராயப்படவுள்ளதோடு, இனி வரும் காலங்களில் அவர்களின் வாழ்வுப் பயணத்திற்கான திட்டங்கள் தொடர்பிலும் இம் மானாட்டில் ஆராயப்படவுள்ளது.

பல அமைப்புக்கள் பல் முனைகளில் தாயகம் நோக்கி வேலை செய்தாலும் அவல நிலைக்குள் மாற்றுத்திறணாளிகள் வாழ்வதையும், கை கொடுத்து தூக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்வில் ஒளீயேற்ற வேண்டிய தேவையும் இன்னமும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. இச் சூழலிலேயே இம் மாநாடு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகர்கள் சந்திப்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மற்றும் கருத்துக்களை இங்கு கீழே உள்ள காணொளியில் காணலாம்.