Home செய்திகள் முறிகண்டியில் விபத்து – இருவர் பலி!

முறிகண்டியில் விபத்து – இருவர் பலி!

177
0

முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 5.30 மணியளவில், மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பேருந்தின் பின்புறமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து தரிப்பிடமற்ற பகுதியில் சடுதியாக தரிக்க முற்பட்டபோது அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.