
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரினை, மக்களின் நிரந்தர நீதிமன்றம் இனவழிப்பு என்றே கூறுகின்றது. போலந்து நாட்டினைச் சார்ந்த ரபேயல் லெம்கின் அவர்கள் இனவழிப்பு எனும் வாசகத்தினைப் பற்றி ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான இரகசிய பயணமொன்றை மேற்கொண்டிருந்த ரபேயல் லெம்கின் யாழ்.ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் ஜக்கிய நாடுகள் இச்சூழ்நிலையையோ, இவ்வினவழிப்பையோ, இனவழிப்பாக ஆராயவில்லையெனவும் அவர் குற்றஞ்சுமத்தியிருந்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்;
தமிழர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட போரைப் பற்றியும், அதனை பரிசீலனை செயவதற்கும் ஐக்கிய நாடுகள் இனவழிப்பு எனும் சொற்பிரயோகத்தினை பாவிக்கவில்லை என்பதை நாம் அங்கீகரிக்கிறோம்.
இருப்பினும், இங்கு தமிழர்களுக்கு எதிரான போரினை, மக்களின் நிரந்தர நீதிமன்றம் இனவழிப்பு என்றே கூறுகின்றது. போலந்து நாட்டினைச் சார்ந்த ரபேயல் லெம்கின் அவர்கள் இனவழிப்பு எனும் வாசகத்தினைப் பற்றி ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
அவரைப் பொறுத்தளவில், ஓர் மக்களின் அடையாளத்தை அழிப்பது இனவழிப்பின் முதலாவது பண்பாகி, அம்மக்கள் மீது அடக்குமுறை செய்பவர்களின் அடையாளத்தினைத் திணிப்பது இரண்டாவது பண்பாகும்.
இங்கு நிகழ்ந்தவற்றை, மக்களின் நிரந்தர தீர்ப்பாயம் இனஅழிப்பு என்றே முடிவுசெய்துள்ளது. இருப்பினும், ஐக்கிய நாடுகள் இச்சூழ்நிலையையோ, இவ்வினவழிப்பையோ, இனவழிப்பாக ஆராயவில்லை.
இதற்கான காரணங்களை நான் விளக்குகிறேன். நான் இதனைப் பின்வருமாறு விளங்கிக்கொண்டுள்ளேன். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையில் அங்கத்தவர்களாகிய பல தேசங்கள், இலங்கை அரசாங்கத்தின் அரசியலை ஆதரிப்பவர்கள்.
இம்மனித உரிமைச் சபையில் இலங்கை அரசிற்கு தங்களது அதரவினை வழங்கி வரும் பல லத்தின் அமெரிக்க இடதுசாரி சனநாயக அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளை அவமானத்திற்குரியவையாகவே நான் கருதுகிறேன்.
இந்நாடுகள், ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்காத மற்றைய நாடுகளுடன் அன்னியப்படுத்தப்பட்டு, அவையும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் முடக்கப்படுகின்றன. இந்நிலைப்பாடுகளால், இனவழிப்புத் தொடர்பான ஓர் சுயாதீன விசாரணைக்கான அவசரத்தினை நிராகரித்தே நிற்கின்றன. ஆகையால், ஐக்கிய நாடுகள் தமிழ் இனஅழிப்புத் தொடர்பான ஓர் விசாரணையை ஆரம்பிக்கவில்லை.
இருப்பினும், மனித உரிமைச் சபையின் உயர்ச் சபையில் இனவழிப்பினை ஆராய்ந்து, ஓர் விசாரணையை மேற்கொள்வதற்கான பல அடிப்படை கூறுகளைக் காணக்கூடியதாகவுள்ளது. அதுவும், தமிழினவிழிப்பு தொடர்பான சான்றுகளைக் கொண்ட பல ஆதரங்கள் உள்ளன.
இது ஓர் நீண்ட செயல்முறையாகவிருந்தாலும், இனவழிப்புத் தொடர்பான விசாரணையை நடத்துவதற்கான அடிப்படைகள், ஐக்கிய நாடுகளின் பல சாசனங்களில் எழுதப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கென்று ஓர் தேசமில்லை என்பது நிதர்சனமான ஒரு விடயம். சுதந்திரத்திற்குப் பின் எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து, இவை ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல சிறுபான்மைகளைப் போல் அல்ல என்பதும் தெளிவாகின்றது.
ஆகையால், தமிழர்களின் உரிமைகளுக்கான இப் போராட்டம் மிகவும் கடினமானவொன்றாக இருந்தாலும், இது முறையானது என்பதற்கு ஆதாரமாகப் பல சர்வதேச அமைப்புக்களின் ஆதரவினைப் பெற்றுள்ளது.
2002ல் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்த சமாதானக் காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்குமிடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள், நோர்வே அரசுடன் பல நாடுகளின் ஆதரவுடன்
தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதற்கு, அக்காலப்பகுதியை ஆராய்வதனூடாக பல தீர்வுகளைக் காணலாம் என நான் நினைக்கிறேன். இச்சமாதானக் காலப்பகுதியில் பல முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
இதற்கு உதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடியது எதுவாயின், தமிழ் மக்களுக்கான தன்னாட்சி வடிவங்களை ஏற்படுத்துவதகாக, இஸ்பானிய தன்னாட்சி வடிவங்களைப் பரிசீலனை செய்வதற்கான வேண்டுகோளாகும்.
இருப்பினும், இக்காலகட்டத்தில் சமூகத்தைப் பிளவுபடுத்தவும், இனக்கலவரங்களை முரண்பாடுகளினூடாக உருவாக்குவதற்கும் இலங்கை அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுத்துவருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக, சமைய நம்பிக்கைகளின் அடிப்படையில் இலங்கை நாட்டவர்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.
இது ஈஸ்டர் தாக்குதல்களின் பிற்புலத்தில் மிகவும் தெளிவாகவே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களைப் போன்று நானும் இத்தாக்குதல்களை இஸ்லாமிய மதத்தவர்களுக்கும், கிறிஸ்தவ மதத்தவர்களுக்குமிடையில் பாகுபாடுகளை உண்டாக்கி, கிறிஸ்தவர்களை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக திருப்பும் ஓர் முயற்சியாகவே பார்க்கின்றேன்.
இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளாக இஸ்லாமிய மக்களைச் சித்தரிப்பதனூடாக, இலங்கைத் தீவிற்குள் அனைத்து மதங்களுக்கும் இடையில் பாகுபாட்டினைத் தூண்டுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தினைத் தெளிவாக அமுல்ப்படுத்துகிறது.
இத்தாக்குதல்கள் தொடரும் இன்றையக் காலச்சூழலில், இலங்கைத் தீவிலிருக்கக்கூடிய அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களின் பிரதிநிதிகள் ஓர் சபையில் சந்தித்து, இப்பிளவுகளுக்கான மூல காரணங்களை ஆராயவேண்டிய தேவையுள்ளது.
இதனூடாக, அனைத்து சமயத் தலைவர்களும் ஒன்றிணைந்து சமயப் பிளவுகளுக்கு எதிராக ஓர் சமூக உபாயத்தினைக் கட்டியெழுப்புவதனூடாக இவ்வாறான வன்முறைக்கெதிரான ஒரு மாற்று நோக்கினை உருவாக்கமுடியுமெனவும் நான் கருதுகிறேன். திரிவுபடுத்தப்பட்ட இப்பிளவுகளை ஆராய்வதற்கான ஓர் சிறந்த வாய்ப்பாகவும் இது அமையும் என நினைக்கிறேன்.
இவ்வாறான தாக்குதல்களின் மூலகாரணங்களை ஆராய்வதற்கும் இது ஒரு மறு சந்தர்ப்பமாக அமையும் ஏனெனில், இவ்வாறான தாக்குதல்களுக்கான முக்கியக் காரணமாக அமைவது தமிழர். உரிமைகளின் நிராகரிப்பு ஆகும். என்றார்.
கதோலிக்க மதகுருவான ரபேயல் லெம்கின் மக்களின் நிரந்தர தீர்ப்பாயத்தின் இன அழிப்பினை பரிசீலனை செய்வதற்காகப், யேர்மன் நாட்டின் பிரேமன் பகுதியில் மக்களின் நிரந்தர தீர்ப்பாயத்தில் கலந்துகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.