Home செய்திகள் பனையோலை உற்பத்தி பொருள் நிலையம் வவுனியாவில் திறந்துவைப்பு:

பனையோலை உற்பத்தி பொருள் நிலையம் வவுனியாவில் திறந்துவைப்பு:

173
0

பனம்பொருட்கள் உற்பத்தி கிராமம் என்ற தொனிப்பொருளில் அரும்பொருட் கலையகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட பனையோலை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிலையம் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா ஓயார்சின்னக்குளம் கிராமத்தில்  சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டு பனைபொருள் சார்ந்த உற்பத்தி நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள இக் கட்டடத்தை கைத்தொழில் கூட்டுறவு, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் புத்திக பத்திரன திறந்துவைத்தார்.

திறப்பு விழாவிற்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பனை ஓலையால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது.

அருங்கலை வளர்ச்சிக்கான உந்துதலாக அமையவுள்ள இந் நிலையம் பனையோலை உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்குமான நிலையமாக செயற்படவுள்ளது.