Home செய்திகள் தேரருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய வியாழேந்திரன்:

தேரருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய வியாழேந்திரன்:

143
0

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்க வேண்டும் எனக் கோரி, அதுரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் போராட்டத்தில் குதித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள ஊடகவியலாளர் படுகொலை நினைவுத் தூபி முன்பாக இன்று காலை அடையாள உண்ணானிலைப் போராட்டதை ஆரம்பித்துள்ளார் வியாழேந்திரன்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களதும் விருப்பம் என்று வியாழேந்திரன் குறிப்பிட்ட அவர், குறித்த விடயங்களை உள்ளடக்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.

வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் சிலரும் இப் போராட்டதில் இணைந்து கொண்டுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கக் கோரி நேற்றைய தினம் கண்டி தலதா மாளிகை முன்பாக உண்ணா நிலைப் போராட்டத்தில் குதித்த அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.