Home தமிழகச் செய்திகள் திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு!

திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு!

414
0

முள்ளிவாய்க்கால் மண்ணில் வகை தொகையின்றி கொன்றழிக்கப்பட்ட 10ம் ஆண்டை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் “மாபெரும் இன எழுச்சி மாநாடு” ஒன்று இன்று திருனெல்வேலியில் நடைபெறவுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின் போது பல நாட்களாக உணவு இன்றி வெறும் உப்புக் கஞ்சியோடு மட்டும் உயிர் வாழ்ந்ததனை நினைவுகூறும் முகமாக இன்றைய நிகழ்வில் அனைவருக்கும் உப்புக்கஞ்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு சுற்றுச் சூழல் மாசு அடைவதை தவிர்க்கும் முகமாக பிளாஸ்ரிக் குவளைகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாபெரும் மாநாடுகளை நடாத்த முடியாத சூழலில் மே 18 அன்று சிறிய அளவில் நினைவு ஒன்று கூடலும், அஞ்ச்லி நிகழ்வும் நடைபெற்றிருந்த நிலையில் இன்று இம் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது.

மாநாடு நடைபெறும் மைதானத்தின் இரு மருங்கிலும் மாவீரர்களின் பிரம்மாண்ட படங்களால் நிரப்பப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 16 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நாலாவது பெரும் கட்சியாக வளர்ச்சி கண்டுள்ள நாம் தமிழர் கட்சி அதன் பின் மக்கள் மத்தியில் வைக்கும் முதலாவது பெரிய மாநாடு இது வென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.