Home முக்கிய செய்திகள் யாழில் முஸ்லீம் மக்கள் போராட்டம்!

யாழில் முஸ்லீம் மக்கள் போராட்டம்!

189
0

யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்ட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தற்போது உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் சடடத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.