
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப் (Ms Jean Gough) மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டிம் சட்டன் (Mr. Tim Sutton) ஆகியோர் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (31/05) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.