Home செய்திகள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி:

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி:

147
0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று (31/0) இந் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரத ஆத்மா சாந்திக்காக அங்கு குழுமியோர் அகவணக்கம் செலுத்தினர்.

கடந்த 2004 ஆண்டு மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.