Home செய்திகள் கடவுச் சீட்டிற்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு!

கடவுச் சீட்டிற்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு!

171
0

கடவுச்சீட்டுக்கான கட்டணத்தில் நாளை முதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பஸான் ரத்ணாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக …

பொதுவான கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாகவும்,

ஒரே நாளில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் 10,000 ரூபாவில் இருந்து 15,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகின்றது.

அதே போல், 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் 2000 ரூபாவில் இருந்து 2500 ரூபாவாகவும்

ஒரே நாளில் விநியோகிப்பதற்கான கட்டணம் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் கடவுச்சீட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கான கட்டணம் 500 ரூபாவில் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.