
யாழில், வீடு ஒன்றில் அமைந்துள்ள மலசலகூட குழியிலிருந்து 7 கைக்குண்டுகளை காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
கொழும்புத்துறை சுவாமியார் வீதியிலுள்ள வீட்டில் மலசல கூட குழிநிரம்பியதை அடுத்து துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குழியைதோண்டியபோது அதில் மர்மபொருட்கள் தென்பட்டுள்ளது.
உடனடியாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குழியில் இருந்து 7 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.