Home உலக செய்திகள் மோடியின் பதவியேற்பிற்காய் டெல்லியில் குவியும் பிரமுகர்கள்:

மோடியின் பதவியேற்பிற்காய் டெல்லியில் குவியும் பிரமுகர்கள்:

206
0

பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக இன்று இரவு 7 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.

பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் 353 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இன்று இப் பதவேற்பு நிகழ்வு நடைபெறுகிறது.

கடந்த 25ம் திகதி நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மோடி சந்தித்து புதிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரியதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க அவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பதிலாக வளாகத்தில் மோடி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இது ஜனாதிபதி வளாகத்தில் நடைபெறும் 4-வது பதவியேற்பு நிகழ்ச்சியாகும்.

பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.