Home செய்திகள் மன்னார் பாடசாலை விவகாரம் – அதிகாரிகளின் அசமந்தப் போக்கு: சி.வி.கே.சிவஞானம்

மன்னார் பாடசாலை விவகாரம் – அதிகாரிகளின் அசமந்தப் போக்கு: சி.வி.கே.சிவஞானம்

134
0

மன்னார் பிரதேச பாடசாலைகள் புத்தளத்தில் தற்போதும் இயங்கி வருகின்றமைக்கு கல்வி உயர் அதிகாரிகளின் அசமந்தமே காரணம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் இன்று  தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்துக்கான பல பாடசாலைகள் வட மேல் மாகனத்துக்குட்பட்ட புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.இந்த விடயம் வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்திலேயே பல தடவைகள் பேசப்பட்டன.குறிப்பாக இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த விடயம் சபையில் விவாதிக்கப்பட்டது.இது குறித்து தீர்மானம் கூட எடுக்கபட்டது.

மன்னார் பாடசாலைகள் புத்தளத்தில் இயங்கி வருகின்ற போதும் அங்கு கடமையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வடக்கு மாகாண சபையின் ஊடாக ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை சபையில் சுட்டிக்காட்டப்பட்டு அவ்வாறு பிற மாகாணத்தில் இயங்கும் பாடசாலைகளுக்கும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எமது சபையின் ஊடாக சம்பளம் வழங்க முடியாது.அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது.

மேலும் குறித்த பாடசாலைகள் வடக்கு மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது வடமேல் மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என கோரப்பட்டது.மேலதிக நடவடிக்கைகள் இன்று வரை எடுக்கப்படவில்லையாயின் அதற்கு முழுப் பொறுப்பும் உயர் அதிகாரிகளே காரணமாகும்.

மாகாண சபையின் தீர்மானத்தை அவர்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. மாகாண சபையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் தொடர் நடவடிக்கையை அதிகாரிகள் செய்திர்ந்தால் இந்த மூன்று ஆண்டில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும்.

எனவே வடக்கு மாகாணத்துக்கு தற்போது வந்துள்ள ஆளுநர் சுரேன் ராகவன் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.