Home உலக செய்திகள் பிரெக்ஸிட் விவகாரம், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: முற்றுப்புள்ளி வைத்த ஐரோப்பிய ஒன்றியம்:

பிரெக்ஸிட் விவகாரம், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: முற்றுப்புள்ளி வைத்த ஐரோப்பிய ஒன்றியம்:

147
0

பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நேற்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூரினார்.

பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதைத் தொடர்ந்து புதிதாக பதவியேற்க பிரதமரின் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென உறுதியளித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளூட் ஜூங்கர் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாது என தெரிவித்துள்ளமை பிரித்தானியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.