Home செய்திகள் தலவாக்கலையில் தீவிபத்து – எரிந்து சாம்பலான 24 வீடுகள்!

தலவாக்கலையில் தீவிபத்து – எரிந்து சாம்பலான 24 வீடுகள்!

146
0

தலவாக்கலை-ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில் பரவிய தீ காரணமாக 24 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தலவாக்கலை ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.