Home செய்திகள் அல்வாய் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவும், சிறப்பு வழிபாடும்:

அல்வாய் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவும், சிறப்பு வழிபாடும்:

148
0

அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி விசேட வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகொலையுண்ட 87 தமிழர்கள் நினைவாக ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசை நேற்று மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நெய்த் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.

யா-வடமராட்சிப் பகுதியில் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட ‘ஒப்பிரேசன் லிபரேசன்’ எனும் பாரிய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தொடர் எறிகணைத் தாக்குதல்களில் 87 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்த்ததோடு பலர் காயமடைந்திருந்தனர்.

இச் சம்பவத்தில் உரிமை கோரப்படாத முற்றிலும் சிதைவடைந்த பதின்மூன்று உடலங்களையும் ஓரிடத்தில் போட்டு ஆலய நிர்வாகத்தினரால் எரியூட்டப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.