Home செய்திகள் மாங்குளத்தில் ரவுடிகளின் தாக்குதல் – இரு பெண்கள் உட்பட ஐவர் காயம்!

மாங்குளத்தில் ரவுடிகளின் தாக்குதல் – இரு பெண்கள் உட்பட ஐவர் காயம்!

164
0

மாங்குளம் பகுதியில் ரவுடிக்கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் மாங்குளம் புதியகொலனியை சேர்ந்த சிவராசா என்பவரின் வீட்டுக்குள் வாள், கைக்கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் சேதமாக்கியுள்ளனர்.

இவர்களது தாக்குதலுக்கு உள்ளாகி பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.