Home செய்திகள் சாவகச்சேரி சந்தை வியாபாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம்!

சாவகச்சேரி சந்தை வியாபாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம்!

142
0

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை தீர்மானித்து, அதற்கான கேள்வி மனு கோரலையும் விடுத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே சந்தை வியாபாரிகள் இன்று (புதன்கிழமை) இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சந்தை குத்தகைக்கு விடப்படுமானால், வியாபாரிகள் மாத்திரமின்றி நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை நகர சபை கைவிட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரின் வாகனங்களை பாதுகாக்கும் விதமாக வாகன பாதுகாப்பு தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் உழவர் சந்தையை மாற்றியமைக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.