Home தாயக செய்திகள் ஊடகவியலாளர் மீது கொக்குளாய் காவல்துறையினர் தாக்குதல்!

ஊடகவியலாளர் மீது கொக்குளாய் காவல்துறையினர் தாக்குதல்!

165
0

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு காவல்துறையினர், இனவாத கருத்துக்களாலும் தகாத வார்த்தைகளாலும் ஏசி அச்சுறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பான நீதிமன்ற உத்தரவின் பின்னர் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை புகைப்படம் எடுக்கவிடாது தடுத்த காவல்துறையினர் ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், தமிழர்கள் தொடர்பிலும் தகாத வார்த்தைகளால் ஏசி , இனவாத கருத்துக்களாலும் ஏசியுள்ளனர்.

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றம் அவ் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை உடனடியாக அகற்றுமாறு காவல்துறையினருக்கு நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், அது தொடர்பாக செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்காக சென்ற முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் என்பவரே தாக்குதலுக்குள்ளானவராவார்.