Home செய்திகள் சாவகச்சேரியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டு!

சாவகச்சேரியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரி போட்டு!

122
0

தமிழர்களின் குறிப்பாக விவசாயிகளின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரி சாவகச்சேரி மட்டுவில் பிரதேசசபை சவாரித் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி, பூநகரி வட்டுகோட்டை, அளவெட்டி, சாவகச்சேரி, கீரிமலை, சங்குவேலி, போன்ற பிரதேசங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கபதக்கமும் பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு இந்த நிகவில் விவசாயிகள் மற்றும் சவாரி சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களை கௌரவிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.