Home தாயக செய்திகள் கிளிநொச்சி பாடசாலையில் படையினரும், காவல்துறையும் குவிக்கப்பட்டு தீவிர சோதனை:

கிளிநொச்சி பாடசாலையில் படையினரும், காவல்துறையும் குவிக்கப்பட்டு தீவிர சோதனை:

160
0
கோப்பு படத் தொகுப்பில் இருந்து…

கிளிநொச்சி வித்தியாலயத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற இத் திடீர் நடவடிக்கையின் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரின் அனைத்து பொதிகளும் சோதனையிடப்பட்டன.

பாடசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முப்படையினர் தீவிர சோதனை நடவடிக்கைளிலும் ஈடுபட்டனர்.

முப் படையினரின் ஒரு மாத கால கடும் கெடுபிடிகள், தீவிர சோதனைகளின் பின் நிலமை வழமைக்கு திருப்பியுள்ளதாகவும், இனி யாரும் அச்சம் கொள்ளாது பாடசாலைகள், வேலைகளுக்கு செல்லலாம் எனவும், இராணுவத் தளபதி, காவல்துறை மா அதிபர், ஜனாதிபதி என அனைவரும் அறிவித்திருந்த சில நாட்களில் இத் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ் வாறான நடவடிக்கைகள், மக்களை தொடர் அச்சத்திற்கு வைத்திருக்கவும், தமிழர் பிரதேசங்களில் மாணவர்களின் கல்வித் தரத்தை குறைத்து எதிர்காலத்தை சூனியமாக்கவும், இராணூவத்தை அனைத்து பிரதேசங்களிலும் நிரந்தரமஅக தங்க வைப்பதற்குமான நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது.