
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
வறட்சியினால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆபத்துக்களையும், உயிரிழப்புக்களையும் தவிர்க்கும் முகமாக நெடுந்தூர நடை பயணங்களையும், துவிச்சக்கர வண்டிப் பயணங்கள்ஐயும் குறைக்குமாறும் அல்லது குறுகிய இடத்திற்கு ஒருமுறை போதிய இளைப்பாறி, நீர் அருந்தி பயணக்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு பயணங்களின் போது வெப்பம் குறைந்த தலைக் கவசம், குடை பொன்றவ்ற்றுடன் தண்ணீர் போத்தல்களையும் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடும் வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து மரணமாவோர் அதிகமாகி வரும் நிலையில், சில வேளைகளில் வீதிகளில் மயங்கி வீழ்வதால் வாகனங்களுக்குள் அகப்பட்டு உயிரிழக்கவும் நேரிடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.