Home தாயக செய்திகள் இரணைமடுவில் – தொடரூந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!

இரணைமடுவில் – தொடரூந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் பலி!

192
0

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரணைமடுப் பகுதியில் தொடரூந்துக் கடவை ஒன்றில் இடம்பெற்ற இவ் விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 62 வயதான இராசேந்திரம் என்பவரே உயிரிழந்தவராவர்.

சடலத்தை பொறுப்பேற்ற மாங்குளம் காவல்துறையினர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்ததோடு விபத்து குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.