Home தாயக செய்திகள் யாழில் அதி வெப்பம் – மயங்கவீழ்ந்த பெண் மரணம்!

யாழில் அதி வெப்பம் – மயங்கவீழ்ந்த பெண் மரணம்!

233
0

வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்ததில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம்-கரணவாய் பகுதியில் நேற்று சனிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அண்ணாசிலையடி, கரணவாயைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஜெரோசன் தயாளினி (வயது-28) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் நெல்லியடி நகரில் உள்ள வங்கி ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே மேற்படி பெண் மயங்கி விழுந்துள்ளார்.

சம்பவத்தின்போது, அப்பகுதியில் நின்றவர்கள் குறித்தப் பெண்ணை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவமானது, கடும் வெப்பத்தினாலேயே நிகழ்ந்திருக்கலாமென தெரிவிக்கப்ப்அடுகின்ற போதும், இது தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.