
திருகோணமலை மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூசகருக்கு உதவியளாராக கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் தான் முஸ்லீம் என்பதையும் மறைத்து சொந்தப்பெயர்ஐ மாற்றி “சிவா” என்ற தமிழ் பெயரை சொல்லி ஒரு தமிழர் போல் வேடமிட்டு இரு வருடங்களாக அம்மன் ஆலயத்தில் பணியாற்றியுள்ளமை அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் கடையொன்றில் கையடக்க தொலைபேசிக்கான அட்டைகளை திருடி சேருவில பகுதியில் விற்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய போது மேற்படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலியான பெயரில் அங்கு பணிபுரிந்ததுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டிருக்கும் சிவா, என்று அழைக்கப்படும் குறித்த நபரின் உண்மையான பெயர் புஹாரி முகமது லாபீர் கான் என்றும் இவர் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவரென்றும் ஏற்கனவேவே மூன்று திருமணங்கள் செய்துள்ளார் எனவும் தெரிய வருகிறது.
மூத்த மனைவி ஓட்டமாவடி மீராவோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபாஹனி என்றும் இரண்டாவது மனைவி மட்டக்களப்பு கரடியனாற்றைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தியென்ற தமிழ் பெண் என்றும் மூன்றாவதாக திருமணம் செய்தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது.
இதற்கிடையில் இவர் பற்றிய ஒரு தகவல் முகப்புத்தக நூலில் வெளிவந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்துரைத்து தன்மீது பொறாமை உள்ளவர்களே இந்த முகநூலை வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தனியார் நிறுவனமொன்றில் ஆசிரியராக கடமையாற்றி முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் முடித்ததற்காகவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரை புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து அவதானித்து வந்த நிலையில், இவர் ஏறாவூருக்கு தனது தாயாரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள பள்ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூதூர் பொலிஸார் ஆலய குருக்களையும் பரிபாலன சபையினரையும் நேற்று சனிக்கிழமை அழைத்து விசாரணைகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.