Home செய்திகள் நன்றி மறந்த இனவாதி மைத்திரி – சீற்றத்தில் செல்வம் எம்.பி:

நன்றி மறந்த இனவாதி மைத்திரி – சீற்றத்தில் செல்வம் எம்.பி:

172
0

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை அளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எளுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து நேரடியாகவும், எழுத்து மூல கடிதங்கள் கோரிக்கைகளுக் கூடாகவும் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால் ஜனாதிபதி சிறிசேன எதனையும் கவனத்தில் கொள்ளவில்லை. இதில் அவர் பாரா முகமாகவே செயற்பட்டார். ஆனால் ஓர் சிங்கள பெளத்தர் என்பதனால் ஞானசார தேரரை விடுதலை செய்துள்ளார் இதன் மூலம் ஜனாதிபதியை நன்றி மறந்தவராகவும், இனவாதியாகவுமே கருதுகின்றோம்.

அத்தோடு ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம். அவர் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும் போது இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்துவோம் என்றார்.