லண்டனில் அமைந்துள்ள BBC ஊடக தலைமை அலுவலகம் முன்பாக தமிழர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
நேற்றைய (மே24) தினம் இடம்பெற்ற இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அண்மையில் தமிழ் மக்களால் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இடம்பெற்ற சம காலத்தில் பி.பி.சி தமிழ் செய்தி சேவையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் கொச்சைப் படுத்தும் வகையில் வெளியிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பதிவுகளை உடனடியாக நீக்கக்கோரியும் எதிர்காலத்தில் பிபிசி இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடக் கூடாது என்றும் BBC இடம் கேட்டுக்கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தமிழ்த் தேசியத்தை மூலாதாரமாக கொண்டு லண்டனில் பல அமைப்புக்கள் கடை விரித்துள்ள்அ போதிலும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதையும், தமிழீழத் தேசியத் தலைவர் மீதான அவதூறுக்கு எதிராகவும் கிளர்ந்தெளாத அமைப்புக்களையும், அவ் அமைப்புகளின் தலைமைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டித்தும், கவலையும் வெளியிட்டிருந்தனர்.


