
தமிழ் இனத்திற்காக போராடிய புலிகளுடன் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளை ஒப்பிடக்கூடாது என முஸ்லீம் கொங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
ஆனால், விடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆகவே அவர்களின் போராட்டத்தை கொள்கையற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இனருடன் ஒப்பிடக்கூடாது. என்றார்.