Home செய்திகள் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய விடுதலையானார் ஞானசார தேரர்!

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய விடுதலையானார் ஞானசார தேரர்!

345
0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைய, ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தென்னக்கோன் நேற்றுமாலை தெரிவித்தார்.

6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பின்னரான தற்போதுள்ள இன முறுகல் சூழலில் கடும்போக்காளரான ஞானசார தேரர் விடுதலையாகியிருப்பது மேலும் சிங்கள பெளத்த பேரினவாதிகள் மத்தியில் ஊக்கத்தை கொடுக்கும் என்பதோடு, அதனால் இனக் கலவரங்கள் இனிவரும் காலங்களில் நடக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.