
லண்டன் – மைடாவேல் (Maida Vale) பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்று இன்று திருடர்களால் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒரே ரக உந்துருளிகளில் கறுப்பு நிற ஆடையும், கறுப்பு நிற தலைக்கவசமும் அணிந்த திருடர் குழுவே திருட்டை மேற்கொண்டுள்ளது.
அவ்வளியால் சென்ற பெண் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இருப்பினும் காவல்துறை வருவதற்கு முன்பாக அவ் விடத்தில் இருந்த மக்களில் சிலர் துணிந்து எடுத்த நடவடிக்கையால் திருடர்களில் ஒருவன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
திருடர்களிடம் கூரிய ஆயுதங்கள் காணப்பட்ட நிலையிலும் சிலரின் துணிகரச் செயல் பாராட்டிற்குரியது.